You are not connected. Please login or register

Post-#130/4/2014, 1:45 pm

Aditya Sundar

JOIN TODAY

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றேன் -தமிழ் டிவி ஷோவில் பெண் பரபரப்பு ஒப்புதல் Empty கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றேன் -தமிழ் டிவி ஷோவில் பெண் பரபரப்பு ஒப்புதல்


சென்னை: தமிழ் டிவி ஒன்றில் இடம் பெற்ற ஷோவில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த பெண் தனது கணவரை கள்ளக் காதலருடன் சேர்ந்து மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ததாக கூறியது பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பெண்ணையும், கள்ளக் காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த கொலை நடந்துள்ளது. அதை சமீபத்தி் நடந்த டிவி ஷோவின்போது அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து புதன்கிழமையன்று இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அந்தப் பெண்ணின் பெயர் பேபிகலா. சம்பந்தப்பட்ட டிவி ஷோவில் அவர் கூறுகையில், எனது கணவர் பெயர் ராதாகிருஷ்ணன். நான் கெளரிசங்கர் என்பவரைக் காதலித்து வந்தேன். இதற்கு எனது கணவர் தடையாக இருந்தார்.

இதையடுத்து 2010ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி நானும் கெளரிசங்கரும் சேர்ந்து கொலை செய்து விட்டோம். எனது கணவரின் முகத்தில் பிளாஸ்டிக் கவரை வைத்து மூடி கட்டி, மூச்சுத் திணறடித்து கொலை செய்தோம்.

எனது கணவர் அப்போது குடிபோதையில் இருந்தார். இதனால் அவரால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. அதன் பின்னர் எனது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக நான் உறவினர்களிடம் கூறி விட்டேன். அதன் பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் நடந்து உடல் எரியூட்டப்பட்டது என்றார்.

இந்த டிவி நிகழ்ச்சியை பேபிகலாவின் மாமியார் பார்த்து விட்டு உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் பேபி கலாவையும், கெளரிசங்கரையும் கைது செய்தனர்.

கணவரைக் கொன்ற பின்னர் பேபிகலாவை வெறுக்க ஆரம்பித்துள்ளார் கெளரி சங்கர். மேலும் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்ய முடிவெ்டுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேபிகலா தானே முன்வந்து இந்த டிவி ஷோவில் பங்கேற்று நடந்ததைக் கூறி விட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன...?

ராதாகிருஷ்ணன் வில்லிவாக்கத்தில் வசித்து வந்தார். இவருக்கு வயது 40. இவரது மனைவியான பேபிகலாவுக்கும் அதே வயதுதான். இருவரும் காதலித்து மணந்தவர்களாம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவரைக் கொலை செய்த பின்னர் கெளரிசங்கருடன் மிகவும் நெருக்கமாகியுள்ளார் பேபிகலா. ஆனால் அவரது போக்கில் மாற்றம் தென்பட்டது. வசதியான வேறு ஒரு பெண்ணைப் பார்த்து அவரைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தே அவரை மாட்டி விடுவதற்காக டிவி ஷோவில் பங்கேற்று நடந்ததைக் கூறியுள்ளார் பேபிகலா.

இந்த ஷோவின்போது கெளரிசங்கரும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டினர். அப்போதுதான் வாய் தவறி கணவரைக் கொன்றதை அம்பலமாக்கி விட்டார் பேபிகலா.

எப்படி நடந்தது கொலை

புதுப்பேட்டையில் உள்ள பேபிகலாவின் உறவினர் வீட்டில் கெளரிசங்கர் வாடகைக்கு குடியிருந்தார். உறவினரை பார்க்க சென்ற போது பேபிகலாவுக்கும், அவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

கணவர் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கெளரிசங்கரை வீட்டுக்கே வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார் பேபிகலா. இதற்கிடையே ராதாகிருஷ்ணன் குடிக்கு அடிமையாகி விட்டார். இதனால் வேலைக்கும் போகவில்லை. வீட்டிலேயே இருந்துள்ளார். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாகியுள்ளது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை தீர்த்தக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 17.7.2010 அன்று பேபிகலாவும் கெளரிசங்கரும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் போதையில் இருந்தபோது சினிமா பாணியில் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் இறுக கட்டி மூச்சு திணற வைத்து கொலை செய்தனர்.

அதன் பின்னர் இருவரும் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கெளரிசங்கருக்கு வருவாய் ஆய்வாளர் வேலை கிடைத்தது. திருப்பத்தூர் சென்று பணியாற்றினார். அரசு அதிகாரி வேலை கிடைத்ததும் கெளரி சங்கர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பேபிகலாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

வசதியான இடத்தில் வேறு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தார். பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. இதை அறிந்த பேபிகலா கள்ளக்காதலனை காட்டிக் கொடுத்ததுடன் தானும் கொலைப்பழியில் சிக்கிக் கொண்டார்.

புதுக் கள்ளக்காதலன் சொல்லியதால்..??

இதற்கிடையே பேபிகலாவுக்கும் இன்னொரு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயுதப்படை போலீஸ்காரர் தம்பிராஜன் என்பவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்படடுள்ளது. அவர் சொல்லித்தான் கெளரிசங்கரை பேபி கலா மாட்டி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இதையடுத்து தம்பிராஜனையும் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனராம்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum