You are not connected. Please login or register

Post-#12/6/2014, 8:20 am

Aditya Sundar

JOIN TODAY

அதிமுக, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்! கட்சியை சீரமைக்க நடவடிக்கை- திமுக தீர்மானம்!! Empty அதிமுக, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்! கட்சியை சீரமைக்க நடவடிக்கை- திமுக தீர்மானம்!!


சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக- தேர்தல் ஆணைய இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருந்ததாக திமுக உயர்நிலைக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கட்சி நிர்வாக அமைப்புகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திமுகவின் உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி பெரும் தோல்வியை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. சில தொகுதிகளில் 3-ம் இடத்திற்கும், 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

இது தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சி பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். இதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அவரின் ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் கருணாநிதியும் ஏற்கவில்லை.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வின் தோல்வி குறித்து ஆராய தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக்கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை கழக முதன்மை செயலாளர் ஆற்காடு நா.வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி. சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி., செ.மாதவன், சுப.தங்கவேலன், கோவை ராமநாதன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, ஏ.டி.கே.ஜெயசீலன், கோவை மு.கண்ணப்பன், ஈரோடு முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தலில் தி.மு.க.வுக்கு மிக மோசமான தோல்வி ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க.வின் வாக்குவங்கி சரிந்துள்ளது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது,

இதன் பின்னர் கூட்ட முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், லோக்சபா தேர்தலின் போது அதிமுக- தேர்தல் ஆணையம் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. தமிழகத்தில் தேவையே இல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டனத்துக்குரியது. திமுக கண்டனம்

தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்; தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை குறித்து விவாதிக்க வேண்டும்; திமுக மாவட்ட நிர்வாகங்களை எளிமையாக்கவும், வலிமைப்படுத்தவும் ஆராய குழு அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum