You are not connected. Please login or register

Post-#17/5/2014, 7:35 pm

Aditya Sundar

JOIN TODAY

கோச்சடையான் டிக்கெட்டுக்கு கூடுதல் விலையா? இந்த எண்ணுக்கு புகார் பண்ணுங்க! Empty கோச்சடையான் டிக்கெட்டுக்கு கூடுதல் விலையா? இந்த எண்ணுக்கு புகார் பண்ணுங்க!


கோச்சடையான் படத்தின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால், அதுகுறித்து புகார் செய்யுமாறு, அகில இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமை அமைப்பு என்ற தனியார் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் தேவராஜ் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கோச்சடையான், திரைப்படத்தை வரும் 9 மே அன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

இந்த திரைப்படங்களை காண்பதற்கு முன், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனை மற்றும் புக்கிங் செய்கிறர்களா என்று பார்க்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மூன்று மடங்கு விலையில் நுழைவுச்சீட்டு விற்பனை செய்தால் அது சட்ட விரோதமானது.

புதிய திரைப்படங்களை பார்த்து மகிழும் நாம், அதே வேளையில் உஷாராக இருக்கவேண்டிய தருணம் இது. கோச்சடையான் படத்தின் டிக்கட்களை சுமார் 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திரையங்கு உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இது சட்டப்படி தவறு. திரையரங்குகளில் கூடுதல் விலை கொடுத்து நுழைவு சீட்டை பொது மக்கள் வாங்க வேண்டாம். நுழைவு சீட்டில் திரையரங்கு பெயர் மற்றும் நுழைவு கட்டணம் குறிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்... இவ் விவரங்கள் இல்லை என்றாலும் அல்லது கூடுதல் விலையில் விற்பனை செய்தாலும் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாநகர காவல் துறை ஆணையாளர் அல்லது சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் புகார் கொடுக்கலாம்.

மேலும், காவல் துறையிடமிருந்து உடனடியாக சி.எஸ்.ஆர். அல்லது எப்.ஐ.ஆர் பெற முடியும். பொது மக்களே, கூடுதல் விலையில் விற்பனை செய்யும் திரையரங்குகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள், எங்களிடம் சி.எஸ்.ஆர் நகல் கொடுங்கள்... நாங்கள் உங்களுக்கு சிறப்பு பரிசு வழங்குகின்றோம்.

உங்கள் ஒவ்வொரு முயற்சிக்குப்... பின்னால் நாங்கள் இருக்கின்றோம். மேலும், விவரங்கள் பெற 094444 78003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்," என தெரிவித்துளார். ஆனால், இது குறித்து ரஜினி ரசிர்களிடம் கருத்து கேட்ட போது, "தலைவர் ரஜினி படம் நாள்தான் எங்களுக்கு தீபாவளி. நாங்கள் எங்கள் வாழ்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளும் அதுதான்.

முன்பு நாங்க மட்டும் ஹேப்பியா இருந்தோம். இப்போ எங்க மனைவி குழைந்தைகள் சகிதம் மகிழச்சியாக கோச்சடையான் பார்க்கப் போகின்றோம். டிக்கெட் விலை ஒரு பொருட்டல்ல.. எந்த விலை கொடுத்தும் தலைவர் படத்தைப் பார்ப்போம்," என்றனர்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum