You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:06 am

Aditya Sundar

JOIN TODAY

கருணாநிதி பிறந்தநாளுக்கு எஸ்.எம்.எஸ்.சில் வாழ்த்து தெரிவிக்க வசதி Empty கருணாநிதி பிறந்தநாளுக்கு எஸ்.எம்.எஸ்.சில் வாழ்த்து தெரிவிக்க வசதி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்எம்எஸ்சில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வசதியை திமுக ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தனது 91-ஆவது பிறந்த நாளை ஜூன் 3ம் தேதி, நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களிடம் கருணாநிதி வாழ்த்து பெறுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று கருணாநிதி பேச உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து பிறந்தநாள் விழா வருவதால், இதை விமரிசையாக கொண்டாடி சோர்த்துள்ள திமுக தொண்டர்களை சுறுசுறுப்படையச் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோருக்காக புதிய வசதிகளை திமுக தலைமை கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக செல்போனில் டிஎம்கே என ஆங்கிலத்தில் (கேபிடல் லெட்டர்) டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு வாழ்த்து செய்தியை டைப் செய்து அதன்பிறகு 54242 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.

அல்லது கருணாநிதியின் இணையதள முகவரியான http://www.kalaignarkarunanidhi.com என்ற தளத்துக்கு சென்றும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum