You are not connected. Please login or register

Post-#19/5/2014, 6:24 pm

Aditya Sundar

JOIN TODAY

அர்ச்சனாவை சஸ்பென்ட் செய்த தமிழக அரசின் உத்தரவு வீணானது: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா Empty அர்ச்சனாவை சஸ்பென்ட் செய்த தமிழக அரசின் உத்தரவு வீணானது: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா


டெல்லி: சிபிஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வீணானது என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.

சிபிஐயில் இணை இயக்குநராக 1999-2006ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் அர்ச்சனா. 2006ஆம் ஆண்டு தமிழகப் பணிக்கு திரும்பினார். இவரது கணவர் ராமசுந்தரம் திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை செயலராக பணியாற்றினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ராமசுந்தரம் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். அர்ச்சனாவோ, மீண்டும் மத்திய பணிக்கு திரும்ப மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில்தான் சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியிடம் காலியாகிறது. இந்த பணியிடத்துக்கு அர்ச்சனா ராமசுந்தரம், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அசோக்குமார், மேற்கு வங்க அதிகாரி பச்சானந்தா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

மேற்கு வங்க அதிகாரியான பச்சானந்தா ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். அவர் கொல்கத்தா மாநகர கமிஷனராகவும் பணிபுரிந்தார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதாவுடனான மோதலால் அவரும் மத்திய பணிக்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தவர்.

சிபிஐ அதிகாரிகள் நியமனத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ இணைந்து முடிவெடுக்க வேண்டும். இதில் சிபிஐ தரப்பு அர்ச்சனா ராமசுந்தரத்தை கூடுதல் இயக்குநராக்க பரிந்துரைத்தது. ஆனால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும் உள்துறை அமைச்சகமும் இதை ஏற்கவில்லை.

Post-#29/5/2014, 6:24 pm

Aditya Sundar

JOIN TODAY

அர்ச்சனாவை சஸ்பென்ட் செய்த தமிழக அரசின் உத்தரவு வீணானது: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா Empty Re: அர்ச்சனாவை சஸ்பென்ட் செய்த தமிழக அரசின் உத்தரவு வீணானது: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா


இந்த விவகாரத்தில் சிபிஐக்கும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கும் இடையே 'அதிகார வரம்புகள்' தொடர்பான பிரச்சனையும் வெடித்தது. இருப்பினும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான நியமனக் குழு, பிப்ரவரி மாதமே அர்ச்சனாவை கூடுதல் இயக்குநராக நியமித்துவிட்டது.

ஆனால் தமிழக அரசின் அனுமதிக்காக அர்ச்சனா ராமசுந்தரம் காத்திருந்தார். இதனிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் சட்டவிரோதமானது எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அதிகாரிகள் நியமனத்தில் சிபிஐக்கு என சில அதிகாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கூறி அர்ச்சனாவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தமிழக அரசின் அனுமதிக்காக அர்ச்சனா ராமசுந்தரம் காத்திருந்தார். இதனிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் சட்டவிரோதமானது எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அதிகாரிகள் நியமனத்தில் சிபிஐக்கு என சில அதிகாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கூறி அர்ச்சனாவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான் வினீத் நாராயணன் என்ற பத்திரிகையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னரே, தமிழக அரசின் அனுமதி இல்லாத போதும் அர்ச்சனா சிபிஐ கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்டதை உடனே சிபிஐ தமது இணையதளத்திலும் பதிவு செய்து கொண்டது. சிபிஐக்கான அதிகாரங்களின்படி, அவசரமான நிலைகளில் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலும் கூட ஒரு அதிகாரியை தமது பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறதாம். இதைசு சுட்டிக்காட்டியே அர்ச்சனா திடீரென பொறுப்பேற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது அர்ச்சனா நியமிக்கப்பட்டு 2 மாத காலமான நிலையில் அவரை விடுவிக்காததால் சிபிஐ நிர்வாகம் தேக்கமடைந்துள்ளது. அதனால் அவசரமாக அர்ச்சனா பொறுப்பேற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது என்று சிபிஐ தரப்பு கூறுகிறது.

அர்ச்சனா பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே தமிழக அரசு அவரை சஸ்பென்ட் செய்வதாக அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவோ, தமிழக அரசின் உத்தரவு வீணானனது- பலனற்றது என்று கூறியுள்ளார்.

தற்போது அர்ச்சனாவின் நியமனத்தில் விதிமீறல்கள் இருந்ததா என்று உச்சநீதிமன்றம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் சிபிஐ அதிகாரம் பெரிதா? மாநில அரசின் அதிகாரம் பெரிதா? என்ற புதிய சர்ச்சையும் உருவாகி இருக்கிறது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum