You are not connected. Please login or register

Post-#18/5/2014, 2:01 pm

Bharathi

JOIN TODAY

பேஸ்புக் நிறுவனம் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்!!! Empty பேஸ்புக் நிறுவனம் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்!!!


சென்னை: இன்றைய இண்டர்நெட் உலகில் சமுக வலைதளத்தின் பங்கு மிகவும் அதிகம், இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிளஸ் ஆகிய சமுக வலைதளங்களின் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டிகளை சமாளிக்க இந்நிறுவனங்கள் பல வகையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த முன்று நிறுவனங்களில் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் பேஸ்புக் தான், இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் கடந்த இரண்டு வருடங்களில் பல நிறுவனங்களை பல ஆயிரம் கோடிகள் கொடுத்து கைபற்றியது. அப்படி இந்நிறுவனம் கைபற்றிய டாப் 10 நிறுவனங்களை பார்போம்.

இந்நிறுவனம் 3டி கேம்களில் பயன்படுத்தும் புதுமையான விர்ச்சுவல் ரியலிட்டி கிலாஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் துவங்கி வெறும் 2 வருடங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தை 2 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

ஆன்லைன் மெசேஜ் ஆப் நிறுவனமான வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது. இந்நிறுவனம் கைபற்றியதில் அதிக மதிப்புடையது இதுவே.

மக்கள் விரும்பும் செய்திகளை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வோர்டுபிரஸ் ஆகிய தளங்களில் பகிர்ந்து அதை குறித்த கருத்துகளை பகிரும் தளம் தான பிரன்ச். இந்நிறுவனத்தை பேஸ்புக் 15 மில்லியன் டாலருக்கு கைபற்றியது.

மொபைல் அப்பிளிக்கேஷன்களின் தகுதியை ஆராய்ந்து அதனை கண்கணிக்கும் ஒரு மென்பொருளை இந்நிறுவனம் தயாரித்தது. மேலும் இந்நிறுவனத்தை இந்தியாவில் இருந்து தனது தலைமையிடத்திற்கு மாற்றியது பேஸ்புக். பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இருந்து கைபற்றிய ஒரே நிறுவனம் லிட்டில் ஐ லேப்ஸ் தான். இந்நிறுவனத்தை 10 மில்லியன் டாலருக்கு கைபற்றியது பேஸ்புக்.

பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரங்களை தனது வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்ல ஒரு கருவி தேவைப்பட்டது. அதற்காக மைக்ரோசாப்ட் அட்லாஸ் அட்வடைசர்ஸ் சூட் நிறுவனத்தை 100 மில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

முகத்தினை அடையாளம் கானும் மென்பொருளை உருவாக்கிய நிறுவனம், இத்தகைய மென்பொருளை எந்த ஒரு பிறமென்பொருளிலும் உபயோகம் செய்ய வழிவகை செய்து இருந்தது. இதனை கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் 100 மில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

பரிசுகளை வழங்கும் நிறுவனமான கர்மா நிறுவனத்தை ஒரு சிறிய தொகைக்கு கைபற்றியது பேஸ்புக். இதன் முலம் பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தனது நன்பர்கள் மற்றும் விருப்பமானவர்களுக்கு அதிர்ச்சியுட்டும் வகையில் பரிசுகளை முடியும்.

மொபைலில் படத்தை பரிமாற்றம் செய்யும் ஆண்டிராய்டு ஆப்பை உருவாக்கிய லைட்பாக்ஸ் நிறுவனத்தை பேஸ்புக் கைபற்றியது. இந்நிறுவனத்தை கைபற்றிய முதல் பேஸ்புக்கின் கேமார அப்பை புறக்கனித்து லைட்பாக்ஸ் மென்பொருளை அமைத்தது.

மொபைலில் நாம் எடுக்கும் புகைபடத்தை பகிரும் ஒரு மென்பொருளான இன்ஸ்டாகிராமை பேஸ்புக் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கு கைபற்றியது.

பேஸ்புக் வலைதள வாடிக்கையாளர் சுலபமாக வாய்ஸ் சாட் மற்றும் விடியோ சாட் செய்ய எதுவாக இருக்கும் வகையில் ஸ்கைப் நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டது பேஸ்புக்.

அனைத்து சமுக வலைதள நன்பர்களை ஒரே முனையில் இணைக்கு முயற்சியை பிரன்டுபீடு நிறுவனம் செய்து வந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பயந்த பேஸ்புக் இந்நிறுவனத்தை 50 மில்லியன் டாலருக்கு கைபற்றியது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum