You are not connected. Please login or register

Post-#14/5/2014, 6:07 pm

Aditya Sundar

JOIN TODAY

மகாராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் பலி Empty மகாராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் பலி


ரோஹா, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 15 பேர் பலியானார்கள்.

திவா - சவந்த்வாடி இடையிலான இந்த பயணிகள் ரயில், நாகோதானே, ரோஹா இடையே தடம் புரண்டு கவி்ழ்ந்தது. இதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்து விழுந்தன. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ரயில் என்ஜினும் கவிழ்ந்து விழுந்தது.

விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் பலி

நிதி கிராமத்திற்கு அருகே உள்ள சுரங்கப் பாதை வழியாக ரயில் சென்றபோது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ரோஹா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

இப்பாதையில் தற்போது ரயில் சேவையை கொங்கன் ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ரூ. 2 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியும், காயமடைந்தோருக்கு ரூ. 10,000 நிதியுதவியும் அளிக்கப்படும்.

சுரங்கத்துக்குள் பயணிகள் சிக்கியுள்ளனரா..?

இதற்கிடையே விபத்து நடந்த இடம் சுரங்கப் பாதை என்பதால் அங்கு பயணிகள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஹெல்ப்லைன் எண்கள்

விபத்தில் சிக்கியோர் நிலை குறித்து அறிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் - 022-22755990/22694090
தாதர் - 022-24114836
தானே - 022-25334840
பன்வெல் - 022-27468833
ரத்தினகிரி - 02352-228176/228951/228954
பேலாபூர் - 022-27561721/23/2

மகாராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் பலி Orp083

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum