You are not connected. Please login or register

Post-#17/6/2014, 3:57 pm

Aditya Sundar

JOIN TODAY

சன் டி.வி.க்கு முறைகேடாக பி.எஸ்.என்.எல் இணைப்புகள்: 2வது நாளாக சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை!! Empty சன் டி.வி.க்கு முறைகேடாக பி.எஸ்.என்.எல் இணைப்புகள்: 2வது நாளாக சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை!!


சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீதான பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2வது நாளாக சிபிஐ இன்றும் விசாரணை நடத்தியது.

சென்னை போட் கிளப்பில் உள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறனின் வீட்டிலிருந்து, அதிநவீன வசதி கொண்ட பி.எஸ்.என்.எல்.லின் 323 இணைப்புகள் முறைகேடாக சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது என்பது புகார். இதனால் சுமார் 440 கோடி ரூபாய் அளவுக்கு பி.எஸ்,என்.எல்லுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, தயாநிதிமாறன் தனது சகோதரரின் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் தூசி தட்டி அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இவ்வழக்கு குறித்து விசாரிக்க டெல்லியிலிருந்து நான்கு பேர் கொண்ட சி.பி.ஐ குழு சென்னை வந்துள்ளது. சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகியான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவிடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

இந்த நிலையில் மற்றொரு சன். டி.வி முன்னாள் நிர்வாகியான சரத் ரெட்டியையும் சிபிஐ விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியிருந்தது. சன். டி.வியில் இருந்த சரத் ரெட்டி பின்னர் கலைஞர் டிவி இயக்குநராக மாறினார். அவரிடம் சென்னையில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் சக்ஸேனாவிடமும் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum