You are not connected. Please login or register

Post-#130/4/2014, 1:51 pm

Aditya Sundar

JOIN TODAY

தண்ணீரும் இல்லை… மின்சாரமும் இல்லை: கேள்விக்குறியாகும் காவிரி டெல்டா குறுவை சாகுபடி Empty தண்ணீரும் இல்லை… மின்சாரமும் இல்லை: கேள்விக்குறியாகும் காவிரி டெல்டா குறுவை சாகுபடி


தஞ்சாவூர்: பொய்த்துப்போன பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் போதிய தண்ணீரும் இல்லை, மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு மின்சாரமும் இல்லாத நிலையில், குறுவை சாகுபடி என்னவாகுமோ என்று கவலையோடு வருணபகவானை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி செய்யப்படும்.இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட் டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் ஏறத்தாழ 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப் படவில்லை. வடிமுனை குழாய் (போர்வெல்) வசதியுள்ள இடங்களில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு அணை நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 34.28 அடியாக உள்ளது.

அணைக்கு 1,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,000 கன அடி தண்ணீர் அணையிலிருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து அதிகமாகி, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறை பொறியாளர்கள்.

மேட்டூர் அணையின் நீர்இருப்பு கவலையளிப்பதாக இருந்தாலும், மும்முனை மின்சாரமும் கிடைக்காதது விவசாயிகளை மேலும் சிக்கலில் ஆழ்த்தி யுள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் வழங்கினால், ஓரளவுக்கு குறுவை சாகுபடியை எதிர்கொள்ளமுடியும் என்கின்றனர் விவசாயிகள்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum