You are not connected. Please login or register

Post-#13/6/2014, 7:58 am

Aditya Sundar

JOIN TODAY

மோடி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடக்கம் Empty மோடி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடக்கம்


டெல்லி: நாட்டின் 16வது நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்தது. நாட்டின் 15வது பிரதமராக கடந்த மாதம் 26ம்தேதி நரேந்திரமோடி பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நாளையும், நாளை மறுதினமும் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் எம்.பி. கமல்நாத் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். புதிய சபாநாயகர் 6ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்.

மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் 9ம் தேதி நடக்கிறது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவார். அதன்பின் மாநிலங்களவை தொடங்கும்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் ஜூன் 10ம் தேதியும், மாநிலங்களவையில் ஜூன் 11ம் தேதியும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.

மக்களவை நாளை கூடுவதை முன்னிட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு விரைந்து வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைக்குமா என்பதற்காக விடையும் நடப்பு கூட்டத்தில் தெரியவரும்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum